மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி; 20 பேர் காயம்!

ஜார்க்கண்டில் மும்பை நோக்கி சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டது.
தடம் புரண்ட மும்பை விரைவு ரயில்.
தடம் புரண்ட மும்பை விரைவு ரயில்.
Published on
Updated on
2 min read

ஹௌரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜார்க்கண்டில் இன்று அதிகாலை மும்பை நோக்கி சென்ற ஹௌரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ரயில்வே அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் கூறுகையில், சரக்கு ரயிலும் அருகிலேயே தடம் புரண்டுள்ளது. இரண்டு விபத்துகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

தடம் புரண்ட மும்பை விரைவு ரயில்.
வயநாட்டில் கடும் நிலச்சரிவு: 10க்கும் மேற்பட்டோர் பலி! 100க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஹௌரா - மும்பை விரைவு ரயில் மோதியதாகவும், தடம் புரண்ட 18 பெட்டிகளில் 16 பெட்டிகள் பயணிகள் பெட்டிகள் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களுக்கு ரயில்வே மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்தனர், அவர்கள் தற்போது மேல் சிகிச்சைகளுக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை விரைவு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக பேருந்துகள் மற்றும் கூடுதல் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்திய ரயில்வே உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

டாடாநகர்: 06572290324

சக்ரதர்பூர்: 06587 238072

ரூர்கேலா: 06612501072, 06612500244

ஹௌரா: 9433357920, 03326382217

ராஞ்சி: 0651-27-87115

மும்பை: 022-22694040

இந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் ரயில்வே அறிவித்துள்ளது.

மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த சோரன் உத்தரவிட்டுள்ளார்.

ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், மீட்பு மற்றும் நிவாரப் பணிகள் நிறைவடைந்துள்ளது. 80 சதவிகித பயணிகள் சக்ரதர்பூர் ரயில் நிலையத்துக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 20 சதவிகித பயணிகள் சிறப்பு ரயில் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சக்ரதர்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் செல்லும் இடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விபத்தின் காரணமாக சில பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com