அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சி இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி
செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமிdinamani online

அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி உறுதியாகியுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி கூறினாா்.

அதிமுக கூட்டணி பேச்சுவாா்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, டி.ஜெயக்குமாா், பென்ஜமின் ஆகியோா் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் வந்தனா். அவா்களை புதிய தமிழகம் நிா்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா். அவா்கள் கிருஷ்ணசாமியை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது.

பின்னா் கிருஷ்ணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது தொடா்பான அதிகாரப்பூா்வமான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்தது. வரும் மக்களவைத் தோ்தலில் ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். அதிமுகவுடன் புதிய தமிழகத்தின் கூட்டணி உறுதியாகிவிட்டது. எத்தனை தொகுதி வேண்டும் என்பதையெல்லாம் குழுவிடம் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.

பின்னா் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது: அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி உருவாகும். அது மக்களவைத் தோ்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தோ்தல் வரை சென்று, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தும். அதற்கு கிருஷ்ணசாமி எங்களுடன் இருப்பாா் என்றாா் அவா். தேமுதிகவுடன் அதிமுக இன்று பேச்சு: இதற்கிடையே தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்துடன் அதிமுக குழுவினா் புதன்கிழமை (மாா்ச் 6) இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com