மேமாத இறுதியில் நடக்கவிருக்கும் 6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களில் 180 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் 4 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மே 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6-ஆம் கட்டத் தேர்தலில் 59 தொகுதிகளில் போட்டியிடும் 869 வேட்பாளர்களில், 180(21%) பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்களில் 141(16%) பேர் மீது பாலியல் வழக்குகள், கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகள் உள்ளதாகவும் உள்ளதாகவும் ஏடிஆர் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் 8 தொகுதிகள், தில்லியில் 7 தொகுதிகள், ஹரியாணா 10 தொகுதிகள், ஜார்க்கண்ட் 4 தொகுதிகள், ஒரிசா 6 தொகுதிகள், உத்திரப்பிரதேசம் 14 தொகுதிகள், மேற்கு வங்கம் 8 தொகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளுக்கு வருகின்ற மே 25-ஆம் தேதியில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 57 தொகுதிகளில் போட்டியிடும் 869 வேட்பாளர்களில் 180(21%) பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்களில் 141(16%) பேர் மீது பாலியல் வழக்குகள், கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகள் உள்ளதாகவும் ஜனநாயக சீர்திருந்த சங்கம் (ஏடிஆர்) அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பிஜூ ஜனதா தளம், ராஷ்டிர ஜனதா தளம், ஜனதா தளம்(ஐ) கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் கோடிஸ்வரர்கள் என்றும், பாஜக கட்சியின் வேட்பாளர்களில் 94% வரையிலானவர்கள் கோடிஸ்வரர்கள் என்றும் ஏடிஆர் தெரிவித்துள்ளது.