தில்லி விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு புரளி!
தில்லி - வாரணாசி விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, புரளி என தெரியவந்துள்ளது.


தில்லியிலிருந்து வாராணசிக்கு செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு ‘6E2211’, தில்லி விமானநிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விமானநிலைய பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானத்தின் கழிப்பறையின் டிஷ்யூ பேப்பரில் '5:30 மணிக்கு வெடிகுண்டு' என எழுதப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானதையடுத்து, பயணிகள் அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு, சோதனை மேற்கொண்டதில் புரளி என தெரியவந்ததாக மத்திய தொழில் பாதுகாப்புப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
துணை காவல் துறை ஆணையர் உஷா ரங்னானி கூறுகையில், அதிகாலை 5 மணியளவில் இந்த கடிதம் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...