
விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ளது குறித்து மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரம் முடிவடைந்தநிலையில், பிரதமர் மோடி மே 30 முதல் ஜூன் 1 வரை விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்யவுள்ளார்.
இதுகுறித்து, மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "யார் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்; ஆனால், தியானத்திற்கு செல்லும்போது யாராவது கேமராவை எடுத்துச் செல்வார்களா? இதுகுறித்து எந்தக் கட்சியும் ஏன் எதுவும் சொல்லவில்லை என்று எனக்கு தெரியவில்லை; இது எனக்கு வருத்தமளிக்கிறது. பரமாத்மாவால் ஒரு நோக்கத்திற்காக அனுப்பப்பட்டவராக பிரதமர் மோடி இருந்தால், அவர் ஏன் தியானம் செய்யவேண்டும்? மற்றவர்கள்தான் அவருக்காக தியானம் செய்வார்கள்" என்று பிரதமர் மோடியின் தியான நிகழ்வினைச் சாடியுள்ளார்.
மேலும், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பதாக மம்தா கூறினார்; இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.