
தில்லியில் கார்களைக் குடிநீர் கொண்டு கழுவுதல், வீட்டுப் பயன்பாட்டிற்கான குடிநீரை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் மற்றும் நிரம்பி வழியும் நீர்த் தொட்டிகள் முதலான செயல்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் தேசிய தலைநகர் தில்லியில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க தில்லி அரசு அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி, தண்ணீர் வீணாக்கப்படுவதைக் கண்காணிக்கவும் குறைக்கவும் 200 குழுக்களை அமைக்குமாறு, தில்லி குடிநீர் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.அன்பரசுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தக் குழுக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று குடிநீர் வீணாவதைத் தடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.