
இமாச்சலப் பிரதேசம், மண்டி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
மண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். மண்டி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, "60 ஆண்டுகளில் காங்கிரஸால் சாதிக்க முடியாததை, நாங்கள் 10 ஆண்டுகளில் செய்துள்ளோம், இதை நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஆனால் நீங்கள் இதுவரை பார்த்தது வெறும் முன்னோட்டம் மட்டுமே, படம் இன்னும் தொடங்கவில்லை. காங்கிரஸைப் போலவே ஒரு வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தால், இந்தியா உலகின் பொருளாதாரத்தில் வல்லரசாக மாறும், வறுமை ஒழிக்கப்படும். தேர்தல் நாளில், வாக்களிக்கச் சென்று தாமரை மலரின் பொத்தானை அழுத்தி, கங்கனா அவர்களை தேர்ந்தெடுங்கள், பின்னர் கவலைப்பட வேண்டாம். இங்குள்ள சூழ்நிலையை நான் மாற்றுவேன். தாமரை மலரின் பொத்தானை அழுத்தி, பாஜகவை வெற்றிபெறச் செய்யுங்கள், கங்கனா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள், மீதமுள்ள வேலையை மோடியிடமும் என்னிடமும் விட்டுவிடுங்கள்; வேலையை நாங்கள் முடிப்போம். இதை நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
மண்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். மண்டி தொகுதி காங்கிரஸிற்கு வெற்றிதரும் குறிப்பிடத்தக்கத் தொகுதியாகும். இமாச்சலப் பிரதேசத்தில் பொதுத்தேர்தலும் ஜூன் 1ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய இரண்டின் தேர்தல் முடிவுகளும் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.