மீண்டும் உக்ரைனிலிருந்து உலகை உலுக்க புறப்பட்டு வந்திருக்கிறது புதிய மால்வேர்!

ரஷ்யாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த மால்வேர் ஐரோப்பாவின் அனைத்து கணிகளையும் ஊடுருவியதோடு மொத்த உலகையுமே ஒரு ஆட்டு ஆட்டி வைக்கப் போவதாக என் உள்ளுணர்வு சொல்வதால் எனக்கு மிகுந்த கவலையாக
மீண்டும் உக்ரைனிலிருந்து உலகை உலுக்க புறப்பட்டு வந்திருக்கிறது புதிய மால்வேர்!

கடந்த மே மாதத்தில் உலகையே உலுக்கிய இணைய வைரஸ் போலவே இப்போதும் புதிதாக ஒரு மால்வேர், இணைய வைரஸ் உலக நாடுகளிடையே பரவிக் கொண்டிருக்கிறதாம். இந்தப் புதிய மால்வேர், ரஷ்யாவின் உக்ரைனில் விதைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இது, மே மாதத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், கல்லூரிகளின் முக்கியமான டேட்டா ரெகார்டுகள் அனைத்தையும் முடக்கிய இணைய வைரஸுக்கு சற்றும் குறைந்ததல்ல. அப்போதைய இணையத் தாக்குதலின் போது; இணையத் திருடர்கள் எனப்படும் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அளித்தால் மட்டுமே குறிப்பிட்ட மால்வேர்களின் தாக்குதலிலிருந்து சம்மந்தப் பட்ட நிறுவனங்களின் கணினிகள் விடுதலை செய்யப்பட முடியும். என அறிவிக்கப் பட்டிருந்தது.

அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் நேற்று மதியத்திலிருந்து உலகின் பல நாடுகளில் அதைக் காட்டிலும் கூடுதல் வலிமை கொண்ட இணைய வைரஸ் ஒன்று தன் வேலையைக் காட்டத் தொடங்கி உள்ளது. உலகெங்கிலும் இருந்து பலர் மால்வேர் தாக்குதலுக்குட்பட்டு செயலிழந்து விட்ட தங்கள் மடிக்கணினிகள் மற்றும் மேஜைக் கணினிகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ரஷ்யாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த மால்வேர் ஐரோப்பாவின் அனைத்து கணிகளையும் ஊடுருவியதோடு மொத்த உலகையுமே ஒரு ஆட்டு ஆட்டி வைக்கப் போவதாக என் உள்ளுணர்வு சொல்வதால் எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது என இன்ஃபோசேஃப் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல் தலைவர் விக்டர் ஸோரா குறிப்பிட்டுள்ளார். 

ஐரோப்பாவில் 60% கணினிகளைத் தாக்கி முடக்கியுள்ள இந்த வைரஸ் உக்ரைனிலும் கணிசமாகத்ட் ஹன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மிகப்பெரிய மால்கள், மருத்துவமனைகள், வங்கிகள், கேஸ் ஏஜன்ஸிகள், என முக்கியமான வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களின் கணினிகளை எல்லா முடக்கியுள்ள இந்த மால்வேரை எப்படி ஒழித்துக் கட்டுவது என கணிப்பொறியியல் வல்லுனர்கள் தற்போது தலைமுடியைப் பற்றிக் கொண்டு கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com