கோவையில் மின் விளக்கைத் திருட உடற்பயிற்சி செய்வது போல நடித்த மனிதர்! (விடியோ இணைப்பு)

மக்களே உஷாராக இருங்கள். வெள்ளைச் சட்டை போட்டிருக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று கூட யாரையுமே இந்தக் காலத்தில் நம்பி விடாதீர்கள்.
கோவையில் மின் விளக்கைத் திருட உடற்பயிற்சி செய்வது போல நடித்த மனிதர்! (விடியோ இணைப்பு)

கோவையில் தனது கடையின் முன்புறம் மாட்டியிருந்த விளக்குகளில் ஒன்றைக் காணாமல் கடையின் உரிமையாளர் தேடியிருக்கிறார். யார் விளக்கைத் திருடியிருப்பார்கள் என்பதை அறிய அவர் தனது கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைச் சோதித்துப் பார்க்க கிடைத்திருக்கும் பதிவுகள் அந்தோ! பரிதாபமாக இருந்தாலும் மின் விளக்கைத் திருடுவதற்காக அந்த மனிதர் பயன்படுத்தியிருக்கும் யுத்தி இன்று நாடு முழுவதும் பலரையும் வெடித்துச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதிகாலை நேரத்தில் பலரும் நடமாடும் ஒரு கடைத்தெருவில் நின்று கொண்டு எதற்காக இந்த மனிதர் அந்த மின்விளக்கைத் திருடுகிறார்? திருட்டு என்றால் இது சாதாரணத் திருட்டில்லை. சார்லி சாப்ளின் கார்ட்டூன்களிலும், மிஸ்டர் பீன் காமெடி ஷோவிலும் வருவதைப் போல இந்த மனிதர் அந்த விளக்கைத் திருடப் படும் பாட்டிற்கு பேசாமல் கடைக்காரரின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து எனக்கு உங்க கடை விளக்கு வேணும், கொஞ்சம் பிச்சை போடறீங்களா? என்று கேட்டு வாங்கியிருந்தாலும் கூட இன்றைக்கு ஊரே கேள், நாடே கேள் என்று இந்த விஷயம் சந்தி சிரித்திருக்காது. 

மின்விளக்கைத் திருட முடிவெடுத்தாயிற்று, ஆனால், தான் திருடும் போது யாரும் பார்த்து விடக்கூடாது என்ற பயமும், வெட்கமும் வேறு! அதனால், அந்த மனிதர், கடைத்தெருவில் மனித நடமாட்டம் இருக்கும் போதும், தன்னை யாராவது நெருங்கி வருகிறார்களோ என்று எண்ணும் போதும் மட்டும் உடற்பயிற்சி செய்வது போல பலே கில்லாடியாக நடிக்கிறார். ஆனால், அவரது நோக்கம் உடற்பயிற்சி செய்வது அல்ல. விளக்கை கழற்றி ஜோபியில் மாட்டிக் கொண்டால் அப்புறம் இடத்தைக் காலி செய்வது தான். இதோ இந்த விடியோ பதிவில் பாருங்கள். ஒருவழியாக மின்விளக்கு அகப்பட்டதும் மனிதர் தனது ஜெகஜ்ஜால உடற்பயிற்சி கண் துடைப்பை அம்போவென விட்டு விட்டு சிட்டாகப் பறந்து விட்டார்.

மக்களே உஷாராக இருங்கள். வெள்ளைச் சட்டை போட்டிருக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று கூட யாரையுமே இந்தக் காலத்தில் நம்பி விடாதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com