கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ரயில்!

இப்புதிய ட்ரெயின் 18 ரயிலானது 18 மாதங்கள் எனும் மிகக்குறுகிய கால அவகாசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரியான அதிவிரைவு ரயில்களைத் தயாரிக்க நிறுவன விதிகளின் படி குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் ஆகலா
கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ரயில்!

இந்தியாவில் சென்னையில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் அதிவேக ரயிலான ட்ரெயின் 18 தனது சோதனை முயற்சியில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை கடந்த ஞாயிறன்று நிறைவு செய்தது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஞ்சின் அற்ற அதிவிரைவு ரயிலே நாட்டின் அதிவேக ரயில்களில் முதன்மையானது என ஐசிஎஃப் ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார். ட்ரெயின் 18 தனது அதிவிரைவு சோதனை முயற்சியை நேற்று கோட்டா சாவாய் மாதோபூர் பிரிவில் நிறைவு செய்தது. ரயில் 18 அதிவிரைவு ரயிலுக்கான சோதனை ஓட்ட முயற்சியில் பெரும்பான்மை நிறைவு பெற்று விட்டதாகவும் இன்னும் ஒரு சில சோதனை முயற்சிகளே பாக்கியுள்ள நிலையில் இதுவரை குறிப்பிடத்தக்க வகையிலான பிரச்னைகளோ, தவறுகளோ எதுவும் நேரவில்லை... ட்ரெயின் 18 சேவைகளை மேம்படுத்தும் பணியே தற்போது நடைபெற்று வருகிறது என ட்ரெயின் 18 ஐ தயாரித்த சென்னை ஐ சி எஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் எஸ். மணி IANS செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சோதனை ஓட்ட முயற்சியில் வென்ற ரயில்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகும். ஆனால் ட்ரெயின் 18 க்கு அத்தனை நாட்கள் தேவைப்படாது. ஜனவரி 2019 முதல் இந்த அதிவிரைவு ரயிலை மக்கள் புழக்கத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐசிஎஃப் தொழில்நுட்ப வல்லுனர்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ட்ரெயின் 18 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள அதிவிரைவு ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸுக்குப் போட்டியாக களமிறங்கி அதன் தேவையைப் பூர்த்தி செய்யும்.

மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ட்ரெயின் 18 ல் ஸ்லீப்பர் கோச்களை இயக்கும் வசதியும் கூடிய விரைவில் நிர்மாணிக்கப்பட உள்ளன. அதற்காகப் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படத் தேவை இல்லை எனவும் எஸ்.மணி தெரிவித்தார்.

இந்த நிதியாண்டில் மற்றுமொரு ட்ரெயின் 18 அதிவிரைவு ரயிலையும் அடுத்த ஆண்டுக்குள் இதே போன்ற 4 ட்ரெயின் 18 அதிவிரைவு ரயில்களை நிர்மாணிக்கவிருப்பதாகவும் ஐ சி எஃப் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலில் உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்தபின் இந்தியாவில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்ட இந்த அதிவிரைவு ரயிலை மத்தியதர வருமானம் கொண்ட பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் அவற்றின் தரம் உயர்த்தப்படவிருப்பதாக ஐசிஎஃப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தற்போது உபயோகத்தில் இருக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக பயன்படுத்தத் தக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் சதாப்தியில் இருப்பதைப் போன்றே 16 கோச்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்புதிய ட்ரெயின் 18 ரயிலானது 15 - 20 சதவிகிதம் ஆற்றல் திறன் வாய்ந்தது மற்றும் குறைவான கார்பன் தடத்தை விட்டுச் செல்லும் என்றும் ஐசிஎஃப் தரப்பில் கூறப்படுகிறது.

இப்புதிய ட்ரெயின் 18 ரயிலானது 18 மாதங்கள் எனும் மிகக்குறுகிய கால அவகாசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரியான அதிவிரைவு ரயில்களைத் தயாரிக்க நிறுவன விதிகளின் படி குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் ஆகலாம் என்பது பொதுவான விதி. ஆனால், ட்ரெயின் 18 ஐப் பொறுத்தவரை அந்த விதியை முறியடித்து தொழில்நுட்ப வசதிகள் மற்றும் திறன் வாய்ந்த ரயில்வே பொறியாளர்களின் உதவுயுடன் வெறும் 18 மாதங்கள் எனும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com