ஆண்டு தோறும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார், ஃப்ளாட், ஃபிக்ஸ்ட் டெபாசிட் அளித்து அசத்தும் வைர வியாபாரி!

ஆண்டு தோறும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார், ஃப்ளாட், ஃபிக்ஸ்ட் டெபாசிட் அளித்து அசத்தும் வைர 
ஆண்டு தோறும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார், ஃப்ளாட், ஃபிக்ஸ்ட் டெபாசிட் அளித்து அசத்தும் வைர வியாபாரி!

ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர வியாபார நிறுவனத்தின் தலைவர் சவ்ஜி தொலாக்கியா 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு வீடு, கார் உள்ளிட்ட பரிசுகளை தீபாவளி போனஸாக வழங்கி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்த 1600 பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளார். அவர்களில் 600 பேருக்கு மாருதி ஆல்டோ, செலிரியோ உள்ளிட்ட கார்களும், 600 பேருக்கு ஃபிளாட்களும், அவர்களது வங்கிக் கணக்கில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டும் வழங்குவதாக அறிவித்துள்ளார்

இந்த போனஸ் அவர்களை மேலும் உற்சாகத்தோடு உழைக்க வைக்கும் என சவ்ஜி தொலாக்கியா தெரிவித்துள்ளார். போனசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரு மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பிரதமர் மோடி கார்களுக்கான சாவியை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நிறுவனத்தின் இந்த ஆண்டு ஊக்கத்தொகை விழாவில் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கார்களுக்கான சாவிகளை அப்பெண்களிடம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனத்தில் சுமார் 5,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சுமார் 4,000 பேர்  இதுவரை விலையுயர்ந்த ஊக்கப்பரிசுகளைப் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்கள். அது மட்டுமல்ல, சமீபத்தில் இந்நிறுவன அதிபர் சவ்ஜி தொலாக்கியா தமது நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் திறமையான ஊஉழியர்களுக்கு விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்களைப் பரிசாக அளித்து அசத்தியிருந்தார். ஏன் தெரியுமா? சூரத்தில் அவர் பரிசாக அளித்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் GLS 350d SUV கார் ஒவ்வொன்றின் ஆன்ரோட் விலையும் கிட்டத்தட்ட முழுதாக 1 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு சவ்ஜி, தமது ஊழியர்களில் திறமையாகப் பணிபுரிந்த 1,200 நபர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் டேட்சன் ரெடி-கோ கார்களை புத்தாண்டுப் பரிசாக அளித்து கெளரவித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு முதல் இவ்விதமாகத் தமது வைர வியாபார நிறுவனத்தின் திறமையான ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விலையுயர்ந்த பரிசுகள் அளித்து ஊழியர்களை மட்டுமல்ல மொத்த இந்தியாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சவ்ஜி தொலாக்கியா. 2016 ஆம் ஆண்டில் சவ்ஜி தமது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அளிப்பதற்காக செலவிட்ட தொகை மட்டுமே 51 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com