என் மீதான பாலியல் புகார்களை சட்டப்படி எதிர்கொள்வேன்: மத்திய இணை அமைச்சர் M J அக்பர் மீ டூவுக்கு பதிலடி!

தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள
என் மீதான பாலியல் புகார்களை சட்டப்படி எதிர்கொள்வேன்: மத்திய இணை அமைச்சர் M J அக்பர் மீ டூவுக்கு பதிலடி!

மத்திய இணை அமைச்சரும், பிரபல பத்திரிகையாளராக அறியப்பட்டவருமான M J அக்பர் மீது ‘மீடூ’ பாலியல் புகார் சுமத்தப்பட்டிருந்தது. தம் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களுக்கு எதிர்வினையாக அக்பர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள் மூலம் எதிர்கொள்ளவிருப்பதாகவும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமது பெயருக்கும், மதிப்புக்கும் களங்கள் கற்பிக்கும் வகையில் இம்மாதிரியான புகார்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டு வருவதாக அக்பர் தெரிவித்துள்ளார்.

தி இந்து பத்திரிகை நிர்வாகி என். ராம், அமைச்சர் அக்பரின் எதிர்வினை குறித்துப் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில், ‘அமைச்சர் ராஜினாமா செய்யாதது நல்லது தான். ஏனென்றால், இப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கவோ, பாலியல் வழக்கு குறித்து விசாரித்து போதுமான தகவல்களைப் பெறவோ போதுமான வாய்ப்புகள் அதிகமும் கிடைக்கும். ஒருவேளை அவர் ராஜினாமா செய்து விட்டாரென்றால் 15 நாட்களில் மக்கள் இந்த விஷயத்தை மறந்து விடுவார்கள்.’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com