தமிழக முதல்வரின் இமேஜ் குறித்த  நடிகர் ரஜினியின் கருத்துக்கு‘ரோஜா’அளித்த பதில்!

இன்னைக்கு இருக்கற சி எம்.. வரும் போது யாருன்னு தெரியாம ஒரு நார்மலான ஆளா வந்திருக்காங்க. ஆனா, இன்னைக்கு வந்து தனித்தியங்கக் கூடிய ஒரு லீடரா அவர் வளர்ந்திருக்கார். ஜெயலலிதா மேடம் மறைவுக்கு அப்புறம் காணா
Roja
Roja
Updated on
2 min read

ஆந்திராவின் நகரி தொகுதிக்கு உட்பட்ட ரயில்நிலைய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மேலாளர் ஜான் தாமஸை சந்தித்து ரோஜா மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரோஜாவிடம் நிருபர்கள், நடிகர் ரஜினிகாந்தும், கமலும் தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என்று பேசியது குறித்து  கருத்து கேட்டனர். அவர்களுக்கு ரோஜா அளித்த பதில்;

சரியான லீடர்ஷிப் இல்லன்னு யார் சொன்னாங்க? என்று ரோஜா கேட்க, நிருபர்களிடமிருந்து ‘ரஜினி சார் சொல்லி இருக்கார்’ என்ற பதில் வந்தது. 

அப்போது ரோஜா;

‘ஆக்‌ஷுவலா எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ஜெயலலிதா மேடம் இறந்ததுக்கு அப்புறம் நான் கூட கொஞ்சம் தமிழ்நாடு பாலிடிக்ஸ் பார்க்கறதை நிறுத்திட்டேன். ஒரு APIC சேர்மன் ஆனதுக்கப்புறம் இப்போ என்னைப் பார்க்க தமிழ்நாட்டுல இருந்து நிறைய பேர் வருவாங்க. என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட சத்தியவேடு, சித்தூரு, ஸ்ரீகாளகஸ்தி இப்படி பார்டர்ல இருக்கற இடங்கள்ல அவங்க இண்டஸ்ட்ரி வைக்கறதுக்காக வரும் போது அவங்க எல்லாரும் என்ன சொல்றாங்கன்னா? இன்னைக்கு இருக்கற சி எம்.. வரும் போது யாருன்னு தெரியாம ஒரு நார்மலான ஆளா வந்திருக்காங்க. ஆனா, இன்னைக்கு வந்து தனித்தியங்கக் கூடிய ஒரு லீடரா அவர் வளர்ந்திருக்கார். ஜெயலலிதா மேடம் மறைவுக்கு அப்புறம் காணாம போயிடும்னு நினைச்ச அதிமுக வை இன்னைக்கு ஒண்ணா சேர்த்திட்டு அவர் முன்னுக்குப் போறாரு. கண்டிப்பா இவர் கூட நாளைக்கு  நிச்சயம் ஃபைட்டிங்ல(fighting) இருப்பார். இவராலயும் போட்டி கொடுக்க முடியும்னு சொல்ற அளவுக்கு அவர் வந்து டெவலப் ஆயிருக்காருன்னா போட்டி இல்லன்னு சொல்றது தப்பு. அது வந்து ரஜினி சார் எதுக்கு சொன்னார்னு எனக்குத் தெரியல. ஏன்னா, நான்  கேட்டவரைக்கும் இப்ப இருக்கறவரு ரொம்ப நல்லாப் பண்றாருன்னு தான் சொல்றாங்க. ஜெயலலிதா மேடம் இருக்கும் போது அவரை நான் பார்த்தது கூட இல்லை. அவர் பேர் கூட தெரியாது. ஆனா, ஓ பி எஸ் சாரை எல்லாருக்கும் தெரியும். ஆனா, இன்னைக்கு இருக்கற சி எம் ஸ்டெப் பை ஸ்டெப் நல்ல விஷயங்கள் பண்ணிட்டு ஜனங்க கிட்ட போயிட்டு அவர் ஒரு லீடர்ஷிப் டெவலப் பண்ணிட்டு வர்றார்னா கண்டிப்பா அவர் கிட்ட வொர்த் இருக்குன்னு தெரியுது’
 
- என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com