
சிறப்புச் செய்திகள்
இடைக்கால பட்ஜெட்: முக்கியம்சங்கள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
பட்ஜெட்டின் முக்கியம்சங்கள்..
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு 2470.93 கோடி ஒதுக்கீடு
565 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டப் பணிகள் விரைவில் முடிவடையும்.
நீர்வள ஆதாரத்துறைக்கு 6 ஆயிரத்து 453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு: ஓ. பன்னீர்செல்வம்
புதிய நீதிமன்றங்களைக் கட்ட ரூ.289.78 கோடி ரூபாயும், ஒட்டுமொத்தமாக நீதித்துறைக்கு ரூ.1,437.82 கோடியும் ஒதுக்கீடு.
நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு ரூ.1450 கோடி ஒதுக்கீடு.
அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம்: ஓ. பன்னீர்செல்வம்
நீர்ப்பாசனத்துக்கு ரூ.6,453 கோடி ஒதுக்கீடு
பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி வருவாயில் இருந்து மாநிலத்துக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.3548 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித் துறையில் ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு.
மாற்றுத்திறநாளிகளுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ.688 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழக தொழில் முதலீட்டு கழகத்துக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி, அதிமுக அரசு ஐந்து ஆண்டு கால ஆட்சியை தந்திருக்கிறது.
6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும்.
இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதி
சட்டப்பேரவையில் அமளி
பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன்பே, தங்களுக்குப் பேச அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அவைத் தலைவர் தனபால் ஏற்காததால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் தரிசனம்
எத்தனை நாள்கள் கூட்டம்?
சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவையின் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவா் பி.தனபாலின் அறையில் நடைபெறும் கூட்டத்தில், பேரவை கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். பிப்ரவரி 25 அல்லது 26-ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்பு உள்ளது. கூட்டத் தொடரின் இறுதி நாளில், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பதிலளிக்க உள்ளாா்.
என்னென்ன அம்சங்கள்?
கடந்த 2016-17-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, 2016 பிப்.16-இல் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா். அதில், கடன் அளவு ரூ.2.47 லட்சம் கோடியாக இருந்தது. தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டத்துக்கான நிதிகள் ஒதுக்கீடும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்யும் 11-வது பட்ஜெட்
துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் தனது 11-வது பட்ஜெட்டை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறாா்.
கனடாவில் உள்ள டோரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதியளிக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பாரம்பரியம்மிக்க பண்பாட்டைக் கொண்டிருப்பதுடன், தமிழ் மொழியானது உலகில் மிகத் தொன்மை வாய்யத மொழியாகவும் திகழ்கிறது. தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ் பண்பாட்டைப் போற்றும் விதமாக, இந்த ஆண்டு முதல், தைப்பூசம் திருநாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் மொழியின் மாண்பிற்காகப் போராடியவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு செய்யப்படுவதுடன், அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் அறிஞர்களுக்கான உதவித்தொகையை 497 நபர்கள் பெற்று வருவதுடன், தமிழ்மொழி பேசும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராடிய 137 எல்லை வீரர்களும் உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர்.
தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் மொத்தமாக 78 விருதுகள் வழங்கப்படுவதுடன், தற்போது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது மற்றும் காரைக்கால் அம்மையார் விருது ஆகிய இரண்டு புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திற்காக, 87,300 சதுர அடி பரப்பளவில் 37.25 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுத் தொகுப்பு மானியமானது 5.98 கோடி ரூபாயிலிருந்து 24.92 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைப் போன்றே, கனடாவிலுள்ள டொரண்டோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 530 கோடி 30 லட்சம் ரூபாயாகவும் வருவாய் செலவுகள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 694 கோடியே 69 லட்சம் ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

