நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது..
வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரம், வெற்றி நிலவரங்கள் உடனுக்குடன் இங்கே.. இணைந்திருங்கள்.
கோவை மாவட்டம் காரமடை நகராட்சி வெற்றி வேட்பாளர்கள்
சுற்று 3:
வால்பாறை நகராட்சி மொத்தமுள்ள 21 வாா்டுகளில் திமுக 19 வாா்டுகளில் வெற்றி, ௮திமுக−1,சுயேட்சை−1.
மேட்டுப்பாளையம் நகராட்சி 2வது சுற்று வெற்றி பெற்றவர்கள்:
திருப்பூர் மாநகராட்சியில் தபால் ஓட்டு எண்ணும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 10 மணி ஆகியும் துவங்கவில்லை.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 1-வது வார்டில் சிபிஎம் வெற்றி
ஆத்தூர் நகராட்சி 1வது வார்டில் திமுக வைச் சேர்ந்த சுந்தரம் வெற்றி.
ஆத்தூர் நகராட்சி 2வது வார்டைச் சேர்ந்த குமார் திமுக வெற்றி.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி 1- ஆவது வார்டு திமுக வேட்பாளர் செல்வராணி வெற்றி.
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 3-ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ந. கதிரேசன் 335 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தபால் ஓட்டு எண்ணுவதற்காக பெட்டியை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர்.
268 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அசம்பாவிதத்தை தடுக்க மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. தடையில்லா மின்சாரம், கணினி, இணையதள வசதி, காவல் துறை, வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக சென்னை மாநகராட்சியில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். வேட்புமனுக்கள் நிராகரிப்பு, திரும்பப் பெற்றதுபோக மொத்தம் 57 ஆயிரத்து 778 போ் தோ்தலில் போட்டியிட்டனா். இத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை (பிப். 22) நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.