கிரெடிட், டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யாவிடில் என்னவாகும்?

உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யுமாறு வங்கி அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பாணை வரலாம்.
கிரெடிட், டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யாவிடில் என்னவாகும்?
கிரெடிட், டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யாவிடில் என்னவாகும்?


உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யுமாறு வங்கி அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பாணை வரலாம்.

இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனையை டோக்கனைசேஷன் முறை மிகவும் எளிமையாக்கிவிடும். ஆனால் அதுவே கட்டாயமல்ல. ஆனால், ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு, நீங்கள் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் அட்டையை டோக்கனைஸ் செய்யவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் பொருள்களை வாங்கும் போது நீங்கள் உங்கள் பண அட்டையின் அனைத்துத் தகவல்களையும் மீண்டும் மீண்டும் உள்ளீடு செய்ய நேரிடும். ஏனென்றால், டோக்கனைசேஷன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதும், அனைத்து சர்வர்களிலிருந்தும் அனைத்து பண அட்டைகளின் விவரங்களும் நீக்கப்பட்டுவிடும். எதுவும் எங்கும் சேமிக்கப்படக் கூடாது என்பது விதி.

டோக்கனைசேஷன் செய்வதால் ஏற்படும் நன்மை?
பண அட்டைகளை டோக்கனைசேஷன் செய்வதால், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் பாதுகாப்பானதாக மாறும்.

ஆன்லைன் வணிகர்கள், வணிக நிறுவனங்கள், வணிக இணையதளங்கள், வணிக செல்லிடப்பேசி ஆப்கள் என எதிலும் ஒரு பண அட்டையின் விவரங்கள் சேமித்துவைக்கப்பட்டிருக்காது.

ஒரு பண அட்டையின் விவரங்களைக் கொடுத்து பணப்பரிமாற்றம் செய்வதை விடவும், டோக்கனைசேஷன் செய்து பண அட்டையின் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவிக்கிறது.

டோக்கனைசேஷன் முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி ஒவ்வொரு முறை ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் போது, அட்டையின் 16 இலக்க எண், அட்டையின் பெயர், காலாவதியாகும் தேதி உள்ளிட்ட அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். இதில்லாமல் எப்படியும் சிவிவி மற்றும் ஓடிபி மூலம் உறுதி செய்யும் முறையும் கூடுதல் பாதுகாப்புக்காக இருக்கும். 

எனவே, டோக்கனைசேஷன் செய்த பண அட்டைக் கொண்டு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது நேரம் மிச்சமாகும். பரிவர்த்தனை மிக எளிதாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com