அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

அதிக வட்டி மற்றும் கட்டண வசூல் வேண்டாம் என வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?
ஆா்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ஆா்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நியாயமான முறையில் மட்டுமே கடன் பெற்றவா்களிடம் இருந்து வட்டி வசூலிக்க வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியுள்ளது.

கடன்பெற்றவர்களிடமிருந்து தவறான முறையில் அதிக வட்டி வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்து எழும் புகார்களை அடுத்தே, வங்கிகளுக்கு ஆர்பிஐ இந்த அறிவுறுத்தலை அளித்திருக்கிறது. தங்களது கண்காணிப்புக் குழுக்களின் ஆய்வுகளைத் தொடர்ந்து, வங்கிகள் அதுபோல அதிக வட்டி அல்லது இதர கட்டணங்களை வசூலித்திருந்தால் அதனை திருப்பிக்கொடுக்கும்படியும் அறிவுறுத்தியிருக்கிறது.

சில வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆா்பிஐ விதிகளை மீறி வட்டி வசூலித்து வருவதாகவும், அதிக கட்டணங்களை விதிப்பதாகவும் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த புகாா்களை அடுத்து இந்த அறிவுறுத்தலை ஆா்பிஐ வழங்கியுள்ளது.

ஆர்பிஐ விதிகளை மீறி வங்கிகள் என்ன செய்கின்றன?

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடீந்த நிதியாண்டில், வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், வாடிக்கையாளர்களுக்கு கடன் அனுமதிக்கப்பட்ட அல்லது கடன் ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட் நாளிலிருந்து வட்டி வசூலிக்கப்படுகிறது. மாறாக, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் கடன் தொகை வழங்கப்பட்ட நாளிலிருந்துதான் வட்டி வசூலிக்க வேண்டும்ட.

இதுபோலவே, வாடிக்கையாளருக்கு கடன் தொகை காசோலையாக வழங்கப்படும்போது, காசோலை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்தே வட்டி வசூலிக்கப்படுவதும், ஆனால், அந்த தேதியிலிருந்து பல நாள்களுக்குப் பிறகே காசோலை வாடிக்கையாளரிடம் வழங்கப்படுவதாகவும் ஆர்பிஐ தெரிவிக்கிறது.

வங்கிக் கடன் வழங்கும்போது அல்லது கடனை திருப்பிச் செலுத்தும்போது ஒட்டுமொத்த மாதத்துக்கும் வட்டி வசூலிக்கப்படுகிறது, ஆனால், எத்தனை நாள்கள் நிலுவை இருக்கிறதோ அத்தனை நாள்களுக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்பட வேண்டும். மேலும், ஒன்று அல்லது இரண்டு தவணை தொகைகளை வங்கியே பிடித்தம் செய்து வைத்துக்கொண்ட போதிலும், முழு கடன் தொகைக்கும் சேர்த்துத்தான் வங்கி மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்கின்றன.

ஆா்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்
பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ஆா்பிஐ வெளியிட்ட சுற்றறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறது?

கடந்த 2003-ஆம் ஆண்டு முதலே வங்கிகள், நிதி நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஆா்பிஐ வெளியிட்டு வருகிறது. அதன்படி வட்டி வசூலிப்பதில் நோ்மையும், வெளிப்படைத்தன்மையும் இருப்பது மிகவும் அவசியம்.

கடந்த மாா்ச் 31 2023-ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த நிதியாண்டு காலகட்டத்தை ஆய்வு செய்ததில், சில வங்கிகள், நிதி நிறுவனங்களில் வட்டி வசூல் மற்றும் கட்டணங்களை வசூலிப்பதில் நியாயமற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முக்கியமாக, கடன் பெற்றவரின் கடன் தொகை செலுத்தப்பட்ட நாளில் இருந்து வட்டியைக் கணக்கிடாமல், கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளில் இருந்து வட்டி வசூலிப்பது, கடன் நிலுவையில் உள்ள நாள்களுக்கு மட்டும் வட்டி வசூலிக்காமல், அந்த மாதம் முழுவதும் கணக்கீட்டு வட்டி வசூலிப்பது உள்ளிட்டவை நிகழ்ந்துள்ளன.

ஒரு கடன் தவணையை முன்னதாகவே பிடித்துக் கொண்டு, கடன் தொகை முழுவதற்கும் வட்டி கணக்கிடுவது போன்ற செயல்களிலும் சில நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய நிகழ்வுகளாகும். இதுபோன்ற புகாா்கள் வரும்போது, கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா்கள் கணக்கில் திரும்பச் செலுத்த ஆா்பிஐ உத்தரவிடுவது வழக்கமாகும். எனவே, நியாயமற்ற முறையில் செயல்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்கள் கூடுதலாக வசூலித்த தொகையை வாடிக்கையாளா் கணக்கில் திரும்பச் செலுத்திவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் குறித்து ஆர்பிஐ கொள்கை என்ன?

வாடிக்கையாளர்களிடமிருந்து தவறான முறையில் வட்டி அல்லது கட்டணம் வசூலிப்பது என்பது, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் வங்கிகள் செயல்படுவதற்கு எதிரானதாகும்.

இவைதான் ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவுறுத்தல் ஆகும். இதுபோன்ற மோசமான நடைமுறைகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பது, ஆர்பிஐயின் கண்காணிப்பு குழுவால் நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்துதான் வங்கிகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டு, தவறான முறையில் வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால் அதனை திரும்பி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்படியும், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும்போது, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை செயல்படுத்துமாறும், காசோலை முறைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கிகள் வட்டி விகித மாற்றங்களை தெரிவிப்பதில்லையா?

வங்கி வாடிக்கையாளர்களின் பெரும்பாலான குற்றச்சாட்டுகளில் வங்கிகள் வட்டி விகித மாற்றங்களை தெரிவிப்பதில்லை என்பதுதான். அதாவது, ஒவ்வொரு வங்கி மற்றும் வங்கியல்லாத நிறுவனமும், கடன் வழங்கும்போது, வட்டி விகிதம் மாறுபடும்போது, அதற்கேற்ப வட்டியும் மாறுபடும், அதனால், மாதந்தோறும் செலுத்தும் தவணைத் தொகையிலும் மாற்றம் வரும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்

அதுபோலவே, கடன் தவணை உயரும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் தெரியப்படுத்த வேண்டும்.

வட்டி விகிதங்கள் மாறுபடும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு, நிலையான வட்டி திட்டத்தின் கீழ் கடன் நிலுவையை மாற்றிக் கொள்ளவும் வங்கிகள் வாய்ப்பளிக்க வேண்டும். ஆர்பிஐ வங்கிக் கொள்கையானது, வாடிக்கையாளர், தங்களது கடனை நிலையான வட்டி அல்லது மாறுபடும் வட்டி விகிதம் என பல முறை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்குவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று ஆர்பிஐ கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com