அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!
/

ஒளிக்காக காத்திருக்கும் டாப்சிலிப் மலைவாழ் மக்கள்

ஒளிக்காக காத்திருக்கும் டாப்சிலிப் மலைவாழ் மக்கள் குறித்து...

News image

உலாந்தி வனச் சரகம், எருமைப்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மின் வசதியின்றி மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் கல்வி பயிலும் குழந்தைகள். - படம் - தினமணி

Updated On :

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் வணிகரீதியாக செயல்படும் தங்கும் விடுதிகளுக்கு மின் இணைப்பு இருந்தும் இருளில் தவிக்கும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும், தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் அமைந்துள்ளது உலாந்தி வனச் சரகம். இந்த வனச் சரகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்துவருகின்றனர். இவர்கள் வனப் பகுதியில் வசித்தாலும், சில மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை ஒட்டியுள்ள மின்வாரிய குடியிருப்புகள், வனத் துறை தங்கும் விடுதிகள் போன்றவற்றுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக டாப்சிலிப்பில் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு வணிக ரீதியாக தங்குவதற்கு கட்டப்பட்டுள்ள விடுதிகளில் மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு அருகே உள்ள எருமைப்பாறை குடியிருப்புகளில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எருமைப்பாறையில் உள்ள 25-க்கும் அதிகமான மலைவாழ் குடியிருப்புக்கு மின் வசதி கேட்டு நீண்ட காலமாக மலைவாழ் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எருமைப்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் ஆய்வுசெய்து புதிய மின்மாற்றியும் அமைத்தனர். மின்மாற்றி அமைப்பதை பார்த்த மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து மின்சாரத்தை பார்க்காமல் இருந்த தங்களுக்கு ஒளி கிடைத்துவிடும் என மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மின்மாற்றி அமைத்து 4 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. 24 குடியிருப்புகளுக்கு மின்சார வாரியத்தில் மின் இணைப்பு பெற தலா ரூ. 3,000 வீதம் கட்டணம் செலுத்தியுள்ளனர். ஆனால், மின்சார வாரியத்தில் இருந்து மின் இணைப்பு வழங்காமல் இருப்பதற்கு வனத்துறையினர் தடையில்லாச் சான்று வழங்கவில்லை என்று மலைவாழ் மக்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது: நாங்கள் வறுமையிலும் 24 வீடுகளுக்கு மொத்தம் ரூ.70 ஆயிரத்துக்கும் மேல் மின் இணைப்பு பெற கட்டணம் செலுத்தியுள்ளோம். ஆனால், வனத்துறை தடை இல்லா சான்று கிடைக்காததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்கின்றனர். வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டால் மத்திய அரசு அனுமதி கிடைக்க வேண்டும் என்கின்றனர். ஆனால், வணிகரீதியாக செயல்படும் தங்கும் விடுதிகளுக்கு மின் இணைப்பு உள்ளது. நாங்கள் அடிப்படை தேவைக்காக கேட்டால் மின் இணைப்பு வழங்குவதில்லை. மின்சார ஒளி இல்லாமல் மாணவர்கள் இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கல்வி பயிலும் அவலம் உள்ளது என்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'புலிகள் காப்பக பகுதி என்பதால் அரசு அனுமதி வழங்கவேண்டும். அதற்கான பணிகளை செய்துள்ளோம்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.