சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

1,000 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தின் மின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் மாதம் 1,000 மெகாவாட் என்ற வீதத்தில் 7 மாதங்களுக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் கோரி மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNEB

தமிழ்நாடு மின்சார வாரியம் - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தின் மின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் மாதம் 1,000 மெகாவாட் என்ற வீதத்தில் 7 மாதங்களுக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் கோரி மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இது, கோடை காலத்தில் 20,000 மெகாவாட்டை தாண்டும். நிகழ் ஆண்டு கோடை காலம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால், மின் தேவை அதிகரித்தது.

பகலில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 6,500 மெகாவாட் கிடைப்பதால், மின் தேவையை ஈடுசெய்ய மின்வாரியத்துக்கு சிரமம் இல்லை.

அதேநேரம், கடந்த மே மாதம் தொடங்கிய காற்றாலை சீசன் அண்மையில் முடிவடைந்தது. எனவே, சூரிய சக்தி மின்சாரம் கிடைக்காத சமயங்களில், காற்றாலை மின் நிலையங்களில் தினமும் 1,000 மெகாவாட் கூட கிடைப்பதில்லை.

இந்நிலையில், மின் தேவையை பூா்த்தி செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கூடுதலாக மின்சாரம் வாங்கும் நடவடிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது. கடந்த அக். 15-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை தினமும் 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்க, சில நிறுவனங்களிடம் அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பல மாவட்டங்களில் மழை பெய்வதால், மின் தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் மின் கொள்முதலும் குறைந்துள்ளது.

இந்நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் உச்சநேர மின் தேவையைச் சமாளிக்க வரும் நவ. 1-ஆம் தேதி முதல், அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை மாதம் 1,000 மெகாவாட் வீதம் 7 மாதங்களுக்கு 7,000 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் கோரி மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER