

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்புத்துறை அலுவலகம் அருகே இன்று மதியம் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியானார்கள்.
ஆப்கான் தலைநகர் காபூலில் மையப்பகுதியில் அமைந்துள்ளது அதிபர் மளிகை. அதை ஒட்டியே அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. அந்த பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் 3.30 மணி அளவில், பணி முடிந்து ஊழியர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், வாயில் அருகே குண்டு ஒன்று வெடித்தது.
சிறிய அளவிலான இந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது என்று பார்க்க அங்கே மற்றவர்கள் கூடிய வேளையில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் மரணம் அடைந்ததாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்களில் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.