பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் பாலியல் வன்முறை வழக்கில் கைது!
சுதந்திரப் போராட்ட வீரரும், லோகமான்யா என்ற பட்டப் பெயர் கொண்டவருமான பால கங்காதர திலகரின் கொள்ளுப் பேரன் ரோஹித் திலக்கை 40 வயதுப் பெண்மணி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்திருக்கிறது மகாராஷ்டிர காவல்துறை. ரோஹித் மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியில் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டு வருபவர். இவரது தாத்தா ஜெயந்த்ராவ் திலக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்.
புனேவில் வசித்து வரும் ரோஹித் திலக், தனக்கு முன்பே அறிமுகமானவரான அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். தற்போது இயற்கைக்கு மாறான உறவுக்கு தன்னை வற்புறுத்துவதாகக் கூறி ரோஹித் மீது அப்பெண்மணி புகார் அளித்ததின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது மகாராஷ்டிர காவல்துறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.