அண்ணாநகரில் இயங்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் SC மற்றும் OBC மாணவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவிருக்கிறார்களாம். டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ் உள்ளிட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்குத் தயாராகும் விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப் படவிருக்கும் 50 மாணவர்களுள் 35 இடங்கள் SC மாணவர்களுக்கும் 15 இடங்கள் OBC மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட வகுப்புகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப நிலை, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தகுதிகளின் அடிப்படையில் இந்த 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வான மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் வென்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்கு பயில விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 20 ஆம் தேதியும், டிஎன்பிஎஸ்சி பரீட்சைகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மே மாதமும் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விவரங்களைப் பெற 6459722, 45522227 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சால்மன் மீன்கள் சென்னையில் கிடைக்குமா? தமிழ்ப் பெயர் இதுவா?

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



