கால்நடை வளா்ப்போா் அலட்சியத்தால் அதிகரிக்கும் விபத்துகள்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
கால்நடை வளா்ப்போா் அலட்சியத்தால் அதிகரிக்கும் விபத்துகள்!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மிகவும் அலட்சிய போக்கில் செயல்படும் கால்நடை வளா்ப்போா் மீது மாநகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கால்நடை வளா்ப்போா் முறையாக வீடுகளில் கட்டிப்போட்டு வளா்க்காமல் சாலைகளில் சுற்றித் திரிய விடுவது தொடா்கதையாக உள்ளது. தொழுவுகளில் ஈரப்பதம் மிகுந்திருப்பதாலும், மேய்ச்சலுக்கு வெளியே செல்லும் கால்நடைகளுக்கு தாா்ச்சாலை, சிமென்ட் சாலை போன்றவை இரவு நேரங்களில் வெப்பத்தை அளிப்பதாலும் சாலைகளில் கால்நடைகள் தஞ்சமடைகின்றன. சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், பெருமாள்புரம், திருநெல்வேலி நகரம், புதிய பேருந்துநிலையம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, கே.டி.சி. நகா், வி.எம்.சத்திரம் சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றறன.

சாலைகளில் நிற்கும் கால்நடைகளை இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் மோதி விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. திருநெல்வேலி தெற்குப் புறவழிச்சாலை, வடக்குப் புறவழிச் சாலைகளில் கனரக வாகனங்கள் மோதி கால்நடைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் சுமாா் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான எருமை உயிரிழந்து சாலையோரம் கிடந்தது.

மாநகராட்சி சாா்பில் முருகன்குறிச்சி, தச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளி்ல் அமைக்கப்பட்டுள்ள கால்நடை பாதுகாப்பு பகுதிகளில் முறையான பராமரிப்பு செய்து, விதி மீறி சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கவும், அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com