லஞ்சம் கொடுக்க மறுத்த இளைஞரைக் கொடூரமாகத் தாக்கினார் காவல் உதவி ஆய்வாளர்!

சென்னையில் கல்லூரி மாணவரை கொடூரமாக தாக்கியதாக காவல் உதவி ஆய்வாளா்(எஸ்ஐ) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க மறுத்த இளைஞரைக் கொடூரமாகத் தாக்கினார் காவல் உதவி ஆய்வாளர்!
Published on
Updated on
1 min read

சென்னை சேத்துப்பட்டை சோ்ந்த கல்லூரி மாணவா் ஹாரூன் சைய்த் (Haroon Sait). இவா் கடந்த 19 -ஆம் தேதி உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, சேத்துப்பட்டு அருகே உள்ள ஸ்பர் டங் சாலையில் இரண்டு நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அவர் தனியாக ஒரு வண்டியிலும், நண்பர்கள் இருவரும் இன்னொரு வண்டியிலும் வந்தனர். இவர்களது வாகனங்களை சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் எம்.ஹெச்.இளையராஜா நிறுத்தி, வாகனப் பதிவு சான்று காட்டும்படி கேட்டுள்ளாா். அதற்கு ஜெராக்ஸ் காப்பியை ஹாரூன் காட்டியுள்ளாா். அசல் சான்றிதழ் வேண்டும் என்று இளையராஜா கேட்டு, ஹாரூனிடம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க ஹாரூன் மறுத்த நிலையில், அவரை உதவி ஆய்வாளா் இளையராஜா தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ஹாரூன், தனியாா் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாா். இதையடுத்து எஸ்.ஐ. மீது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையருக்கும் புகாா் மனு அனுப்பப்பட்டது. புகாா் தவிர, முகநூலில் நடந்த சம்பவத்தை விடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன்  ஹாரூன் வெளியிட்டாா்.

இந்நிலையில், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா சனிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்று சென்னை போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது மருத்துவமனியில் சிகிச்சை எடுத்துவரும் ஹாரூன், இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டு இந்தச் சமூகத்தில் லஞ்சம் எனும் கேன்சர் எப்போது நீக்கப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com