மணமகளின் வயது 21, மணமகன் வயது 65! பீகாரில் நடந்த அதிர்ச்சி திருமணம்!

பீகாரிலுள்ள சமஷ்டிபூரில்தான் மேற்சொன்ன அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.
மணமகளின் வயது 21, மணமகன் வயது 65! பீகாரில் நடந்த அதிர்ச்சி திருமணம்!
Published on
Updated on
1 min read

பீகாரிலுள்ள சமஷ்டிபூரில்தான் மேற்சொன்ன அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. திருமண நாளன்று மணமகன், தான் காதலித்த பெண்ணுடன் மண்டபத்தை விட்டு வெளியேறி விட்டதால், 21 வயது மணப் பெண் ஸ்வப்னா உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதைவிட அதிர்ச்சியான சம்பவம் என்னவெனில் ஸ்வப்னாவை 65 வயதான ரோஷனுக்கு அதே முகூர்த்தத்தில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துவிட்டனர் அவரது குடும்பத்தினர்.

ரோஷன் வேறு யாருமல்ல. ஓடிப் போன மணமகனின் தந்தை. வருங்கால மாமனாரை திருமணம் செய்து கொள்ள ஸ்வப்னாவை கட்டாயப்படுத்தியது ஸ்வப்னாவின் தந்தை என்பது பெரும் சோகம். தனது கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று மகளின் வாழ்க்கையில் இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார் அந்த தந்தை. ஸ்வப்னா வேறு வழியின்றி ரோஷனை மணம் புரிந்தார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com