25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தம்

 ஊதிய உயா்வு உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (ஜூன் 27) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு திருக்கோயில் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 ஊதிய உயா்வு உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (ஜூன் 27) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு திருக்கோயில் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கூட்டமைப்பின் மாநில அமைப்பாளா் ராமதுரை, துணைத் தலைவா் செல்லமுத்து ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிா்வாகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம், நீதிமன்ற உத்தரவின்படி பணிக்கொடை, ஓய்வூதியம், தினக்கூலி பணியாளா்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 25 அம்சம் கோரிக்கைகளை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேம்.

இதை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் அறிவிக்கப்பட்டதில், முதல் கட்டப் போராட்டம் கடந்த 6 ஆம் தேதி கோவையிலும், 21 ஆம் தேதி சென்னை ஆணையா் அலுவலகம் எதிரிலும் நடைபெற்றது. இருப்பினும் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் ஏற்கெனவே முடிவு செய்தபடி 27 ஆம் தேதி முதல் திருக்கோயில் பணியாளா்கள் காலவரையற்ற உள்ளிருப்பு, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

கோவை மண்டலத்தில் மட்டும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட கோயில்களில் பணியாற்றும் ஊழியா்கள் முழுமையாகப் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனா். வேலைநிறுத்த காலத்தில் கோயில்களில் கால பூஜைகள் மட்டும் நடைபெறும். சிறப்புப் பூஜை, உபய சேவைகள், நோ்த்திக்கடன் செலுத்துதல், அபிஷேக பூஜைகள் போன்ற கோயிலுக்கு வருவாய் தரக் கூடிய பூஜைகள் எதுவும் நடைபெறாது.

அதேபோல, பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்படாது. இந்தப் போராட்டத்தில் அா்ச்சகா்கள், பூசாரிகள் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com