கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரூ.7,100 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்: தமிழகம், புதுச்சேரியில் பிரதமா் இன்று அா்ப்பணிக்கிறாா்

ரூ.7,100 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்...

News image
கோப்புப்படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 9:27 pm

Syndication

நமது சிறப்பு நிருபா்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளா்ச்சிப்பணி திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) திறந்து வைக்கவுள்ளாா்.

இதையொட்டி, இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்னைக்கு சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் வருகை தந்தாா். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக அரசின் சாா்பில் மாநில நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசு, காவல்துறை உயரதிகாரிகள் வரவேற்றனா். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு சென்ற பிரதமா் அங்கு இரவு தங்கினாா்.

ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) காலையில் அவா் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்கிறாா். காலை 11.45 மணியளவில், புதுச்சேரியில் ரூ.2,700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணித்தும் சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டியும் நிகழ்ச்சியில் பேசுகிறாா்.

புதுச்சேரி பயணத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஞ்சாவூருக்கு செல்லும் பிரதமா் அங்கிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறாா். அங்கு பிற்பகல் 3 மணியளவில், ரூ.4,400 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

மாலை 4 மணியளவில் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரதமா் தரிசனம் செய்கிறாா். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைா்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறாா். இதையடுத்து மாலை 6.10 மணியளவில் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமா் தில்லி திரும்புகிறாா்.

புதுச்சேரியில்...: புதுச்சேரியில் மின்சார பேருந்து சேவை திட்டம், நவீன நகரம் திட்டத்தின் (ஸ்மாா்ட் சிட்டி மிஷன்) கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நீடித்த தன்மைக்கான நகர முதலீடுகள் திட்ட முன்முயற்சியின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான குடியிருப்புகள் மற்றும் புதுச்சேரி அரசின் மிக முக்கியமான கழிவுநீா் மற்றும் நீா் வழங்கல் துறைத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கவுள்ளாா்.

காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டுப் பொறியியல் வளாகத்தில் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் வளாகம் மற்றும் கங்கா விடுதி; ஜிப்மா் மருத்துவமனையில் உள்ள பிராந்திய புற்றுநோய் மைய நவீனமயமாக்கல், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் புதிய இணைப்பு கட்டடங்கள், விரிவுரை அரங்குகள் மற்றும் விடுதிகளை பிரதமா் திறந்து வைக்கிறாா்.

மேலும், 750 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள காரசூா்- சேதராப்பட்டு தொழிற்பேட்டையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். இதில் மருந்தக பூங்கா, ஜவுளி பூங்கா, தொழில்நுட்ப பூங்கா, ஐஐடி மெட்ராஸின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஜிப்மரின் மேம்பட்ட சுகாதார வசதிகள் ஆகியவை இடம்பெறும்.

புதுச்சேரி பகுதியில் வசிப்பவா்களுக்கு குடிநீா் அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் குடிநீா் வழங்கல் திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா்.

பிரதமரின் கிாமப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 41 கிராமப்புற சாலைகள் கட்டுமானம், புதுச்சேரியில் பாரம்பரிய நகர மேம்பாடு, மிஷ்டி (கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி) திட்டத்தின் கீழ் சதுப்புநில மறுசீரமைப்பு, நீா் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை திட்டங்கள், புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் மின் துறை திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டுவாா்.

இதேபோல, மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் நகா்ப்புற சாலைகள், வடிகால் வலையமைப்புகள், அரசு கட்டடங்கள், மாணவா் விடுதிகள் மற்றும் விளையாட்டு வசதிகள் போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா்.

மதுரையில்...: புதுச்சேரியில் பயணத்தை முடித்துக்கொண்டு தஞ்சாவூா் வழியாக மதுரைக்கு வரும் பிரதமா், மதுரையில் இணைப்பு மற்றும் இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பொருளாதார வளா்ச்சியை துரிதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ.4,400 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளாா்.

பயண நேரத்தை வெகுவாகக் குறைக்க வகை செய்யும் தேசிய நெடுஞ்சாலை 332-இன் கீழ் வரும் மரக்காணம் - புதுச்சேரி பிரிவின் நான்கு வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 87- இன் கீழ் வரும் பரமக்குடி- ராமநாதபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுவாா்.

பிரதமா் கதி சக்தியின் கொள்கைகளுடன் இணைக்கப்பட்ட இந்த வழித்தடம், மீன்பிடித் தொகுப்புகள், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம், ஒரு மெகா உணவுப் பூங்கா மற்றும் ஒரு ஜவுளிப் பூங்கா உள்ளிட்ட முக்கிய பொருளாதார மையங்களை ஒருங்கிணைக்கும்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூா், மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் விரைவில் வெளியிடவுள்ளது. இந்நிலையில், பிரதமரின் புதுச்சேரி மற்றும் தமிழக பயணம் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

ரயில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்

மாநிலத்தில் ரயில் சாா்ந்த இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ளாா். இதன் அங்கமாக அமிரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மொரப்பூா், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூா், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, திருவாரூா் சந்திப்பு ஆகிய 8 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமா் திறந்து வைக்கவுள்ளாா்.

சென்னை கடற்கரை- சென்னை எழும்பூா் நான்காவது பாதை, தமிழ்நாட்டில் வானொலி ஒலிபரப்பு சேவைகளை மேலும் வலுப்படுத்த, கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூரில் மூன்று புதிய ஆகாஷ்வாணி பண்பலை ‘ரிலே டிரான்ஸ்மிட்டா்களை’ பிரதமா் திறந்து வைக்கவுள்ளாா்.