நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனதை குளிர்விக்கும் இன்றைய மழைச் செய்தி

சென்னையில் நேற்று (அக்டோபர் 16) முழுவதும் மழை பெய்தது. காலையில் தொடரும் மழையில் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News image
Updated On :17 அக்டோபர் 2019, 5:33 am

DIN

சென்னையில் நேற்று (அக்டோபர் 16) இரவு முழுவதும் மழை பெய்தது. காலையிலும் தொடரும் மழையினால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் சாலைகளின் நிலை மோசமாகி வருவதும், அதற்கேற்ற முன்னேற்பாடு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதும் வழமைதான். அதேபோல இந்த ஆண்டும், ஒரே நாள் மழைக்கு சாலைகளில் நீர் தேங்கி, பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் இரு சக்கர வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் சாலையில் தேங்கியுள்ள மழைநீர்தான். அடுத்த சில நாட்களுக்கு மழை வலுக்கும் என்ற நிலையில், சாலைகளை சீரமைப்படுமா என்பது கேள்விக்குறிதான்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தென் சென்னையில் அதிகம் மழை பொழிந்து வந்த நிலையில், வட சென்னையிலும் மழை வலுக்கும் என்று ட்விட்டரில் 'சென்னை வெதர்’ பதிவிட்டுள்ளது.

Heavy spell over many places in south Chennai and rain will extend to north Chennnai

mdashChennai WeatherchennaiweatherOctober 17, 2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.