ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வீடு திரும்பினார் அமிதாப் பச்சன்: கரோனாவிலிருந்து குணம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.

News image
அமிதாப் பச்சன் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்
Updated On :2 ஆகஸ்ட் 2020, 1:22 pm

DIN

மும்பை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.

பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று கரோனா நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது.

இதனை அவரது மகன் அபிஷேக் பச்சன் சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சீனியர் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினார். அமிதாப் பச்சன் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர் படைகளுக்கும், இக்கட்டான சூழலில் அவர்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த மாதம் 11-ஆம் தேதி கரோனாவால்  பாதிக்கப்பட்ட அபிஷேக் பச்சன் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி அமிதாப் பச்சனின் மருகள் ஐஸ்வர்யா ராய், அவரது பேத்தி ஆராத்யா ஆகியோர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.