பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக தருகிறது: திமுக வழக்கு

பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றம்.
Updated on
1 min read

பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2,500 ரூபாய்க்கான பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினருக்கு பதிலாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதற்கான டோக்கன்கள் வீடுதோறும் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், டோக்கன்களை அதிமுகவினர் தருவதாக திமுக எம்.எல்.ஏ. ஆர்.எஸ். பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால் பரிசுத்தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காத சூழல் ஏற்படுகிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது தவறானது என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com