ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஐக்கிய அரபு எமிரேட்டிலும் கரோனா

ஐக்கிய அரபு நாட்டில் காரோனா வைரஸ் காரணமாக  ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரபு நாட்டின் நல்வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2020, 5:32 am

துபை: ஐக்கிய அரபு நாட்டில் காரோனா வைரஸ் காரணமாக  ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரபு நாட்டின் நல்வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பொன்றையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சீனாவில் வைரஸ் பாதித்த வூஹான் மாகாணத்திலிருந்து  இங்கே வந்தவர்கள்.

இவர்களில் ஒருவருக்குதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் அவர் நலமாக இருப்பதாகவும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து தொற்று நோய்க் கண்டுபிடிப்பு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் நிலைமை முனைப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.