சிதம்பரத்தில் திமுக சார்பில் 300 பேருக்கு நிவாரண உதவி

சிதம்பரம் நகர திமுக சார்பில் கார் மற்றும் வேன் ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்கள் இன்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்டது.
சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் கார் ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறார் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார்.
சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் கார் ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறார் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார்.

சிதம்பரம்: சிதம்பரம் நகர திமுக சார்பில் கார் மற்றும் வேன் ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்கள் இன்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்டது.

சிதம்பரம் நகர திமுக சார்பில் சிதம்பரம் பகுதியில் வசிக்கின்ற 300க்கும் மேற்பட்ட கார் மற்றும் வேன் ஓட்டுநர்கள் குடும்பங்களுக்கு அரிசி, மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சிதம்பரம் நகர திமுக செயலாளர் கே.ஆர். செந்தில்குமார் பங்கேற்று நிவாரணப் பொருள்களை வழங்கினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் த .ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பிரதிநிதிகள் இரா. வெங்கடேசன் , வி.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, நகர துணைச் செயலாளர்கள் சி. பன்னீர் செல்வம், பா. பாலசுப்பிரமணியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ப. அப்பு சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் க. அருள், நகர செயற்குழு உறுப்பினர் பி.எஸ். ராஜராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே. வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கினைப்பாளர் வீரா. அருள்வேலன், நகர அமைப்பாளர் ஶ்ரீதர், இளைஞரணி ஏ.பி.பி. பாலு, தில்லை. சரவணன், சங்க நிர்வாகிகள், பொன்மொழிதேவன், கே. பாலகுரு, டி.மணி, என். கணபதி, எஸ். சங்கர், எஸ். பாஸ்கரன், ஜி. சாமிதுரை எஸ். விஜயராஜா, ஆர். பிரபாகரன், டி. செந்தில், எஸ். மணி. ஜி. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com