
திருப்பூர்: தாராபுரத்தில் நகராட்சி அலுவலர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, நகராட்சி அலுவலகம் மூடப்பட்டுவிட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், வசூல் பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண் அலுவலர்கள் உள்பட 4 பேருக்கு கரோனா நோய் தொற்றுக்கான அறிகுறி இருந்தது இன்று (புதன்கிழமை) தெரியவந்தது. மேலும், பெண் அலுவலர் ஒருவரின் கணவருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து 5 பேரையும் நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் வீட்டில் தனிமை படுத்தியுள்ளனர். மேலும் கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக இன்று (புதன்கிழமை) மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே வேளையில் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.