பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சட்டப்பேரவை உறுப்பினரின் மகள் உள்பட 3 பேருக்கு கரோனா

கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகிய 3 பேருக்கு கரோனா இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூன் 2020, 2:18 pm

DIN


கோவை: கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகிய 3 பேருக்கு கரோனா இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை (தெற்கு) சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணனின் மகள் (32), மருமகன் (38) மற்றும் பேத்தி (11) மூன்று பேரும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்காக மதுரைக்கு சென்று இரண்டு நாள்களுக்கு முன் கோவைக்கு திரும்பியுள்ளார். 

மதுரையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் எம்.எல்.ஏ. அவரின் மனைவி, மகன், மகள், மருமகன், பேத்தி ஆகிய 6 பேரும் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் சட்டப்பேரவை உறுப்பினரின் மகள், மருமகன் பேத்தி ஆகிய 3 பேருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 3 பேரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.