

வாராணசியில் மக்கள் வருகையில்லாத நிலையில் கங்கையில் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

கரோனா அச்சம் காரணமாக மும்பையில் வழிபாட்டுக்கு மூடப்பட்டுவிட்ட நிலையில் புனித மிக்கேல் தேவாலயத்தின் மூடப்பட்ட கதவுகளின் முன் வழிபடும் மக்கள்.

இராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் திக்ரிஸ் ஆற்றுப் பாலத்தைக் கடந்து செல்கிறார் ஒருவர். கரோனா வைரஸ் பரலவலைத் தடுக்க இராக் அரசு ஒரு வார கால ஊரடங்கை அறிவித்துள்ளது.

பிலிப்பின்ஸின் தலைநகர் மணிலாவில் பன்னாட்டு விமான நிலையத்தில் கரோனாவுக்கு அஞ்சி பிளாஸ்டிக் பைகளால் தற்காத்துக் கொண்டு புறப்பட்டுச் செல்லும் சீனக் குடும்பத்தினர். ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் நாட்டின் பிரதான வடக்குப் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று விதித்த காலக்கெடுவை பிலிப்பின்ஸ் அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது சிங்கப்பூருடன் மலேசியாவை இணைக்கும் சிங்கப்பூர் பெருவழி (இடம்: ஜோகர் பஹ்ரூ, மலேசியா). தற்காப்பு நடவடிக்கையாக மார்ச் 18 முதல் மக்கள் வந்துசெல்வதைத் தடுக்கும் வகையில் தன்னுடைய எல்லைகளை மலேசிய அரசு மூடிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான் தொகுதி மாறுவதாக கூறவில்லை: செல்வப்பெருந்தகை

தமிழகம், புதுச்சேரியில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!
ரூ. 200 கோடி பங்களா குற்றச்சாட்டு! கேரள பாஜக தலைவர் வேட்புமனு ஏற்பு!

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழப்பு!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

