தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 19, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :20 மார்ச் 2020, 10:19 am

DIN

கிரீஸிலுள்ள ஏதென்ஸ் நகரில் மூடப்பட்டிருந்த விளையாட்டு அரங்கத்தில்  டோக்கியோ கோடை ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடருடன் கிரேக்கத்தின் ஒலிம்பிக் போல் வால்ட் சாம்பியன் கத்ரினா ஸ்டீபானிடி. கரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த அரங்கத்திற்குள் மிகச் சில ஊடகத்தினரை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Story image

மக்கள் அனுமதிக்கப்படாமல் காலியாகக் கிடக்கிறது ஒலிம்பிக் சுடர் கைமாற்றிக் கொள்ளப்பட்ட அரங்கம்.

Story image

கரோனா அச்சம் காரணமாக தம்மைத் தாமே சமூகத்திலிருந்து விலக்கிவைத்துக் கொள்ளும் வகையில் லண்டனிலுள்ள பக்கிங்காம் அரண்மனையிலிருந்து விண்ட்சர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்.  

Story image

போலந்து எல்லையில் ஜெர்மனியிலுள்ள கோயர்லிட்ஸில்  ஏ4 நெடுஞ்சாலையில் நெரிசலால் முடங்கிக் கிடக்கும் வாகனங்கள். இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கிக் கொண்டு, சுமார் 40 கிலோ மீட்டர் நீளத்துக்கு நிற்கின்றன. 

Story image

மும்பையில் வெறிச்சோடிக் கிடக்கும் இந்தியாவின் மேற்குவாசல். 

Story image

பெங்களூருவில் பயணிகள் கூட்டமின்றிச் செல்லும் மெட்ரோ ரயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.