கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அன்னையர் தினம்: சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவர்களுக்கு கையுறைகள்

சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் சங்ககிரி அரசு மருத்துவமனையில் பணிபுரியம்  மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்புக்  கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

மருத்துவ அலுவலர் (பொ) திருமாவளவனிடம் கையுறைகள் வழங்கும் ரோட்டரி நிர்வாகி எ.வெங்கடேஸ்வர குப்தா

Updated On :10 மே 2020, 9:22 am


சங்ககிரி: அன்னையர் தினத்தையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் சங்ககிரி அரசு மருத்துவமனையில் பணிபுரியம்  மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்புக்  கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கரோனை பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கையாக அரசுகள் மே 17-ம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதையடுத்து சுகாதாரத் துறையின் சார்பில்  பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அன்னையர் தினத்தையொட்டி, கரோனா பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சங்ககிரி மருத்துவர்கள், செவிலியர்களுக்குத்  தற்பாதுகாப்பு உபகரணங்களான கையுறைகளை ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி எ. வெங்கடேஸ்வரகுப்தா தலைமையில் மருத்துவ அலுவலர் (பொ) திருமாவளவனிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவர் சசிகுமார், செயலர் திவாகர், நிர்வாகி செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.