47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூரிலிருந்து பிகார், ஒடிசா, உ.பி.க்கு சிறப்பு ரயில்கள்: 4,800 தொழிலாளர்கள் சென்றனர்

திருப்பூரில் இருந்து பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேசத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 4,800 தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.

News image
Updated On :26 மே 2020, 1:53 pm

DIN

திருப்பூரில் இருந்து பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேசத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 4,800 தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகார், ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டதால் தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் படி தமிழக இவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, சொந்த ஊர்களுக்குத் திரும்பும் தொழிலாளர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில்,. திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி திருப்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பிகார், ஒடிஸா, உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இவற்றில் ஒரு ரயிலுக்கு தலா 1,600 பேர் வீதம் மொத்தம் 4,800 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

முன்னதாக திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளில் ரயில் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

இதன் பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 வேளைகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் பாட்டில்களும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.