தமிழகத்தில் எங்கே முடக்கம், எங்கெங்கே தளர்வுகள்?
தமிழகத்தில் எங்கே பொது முடக்கம் தொடரும், எங்கெங்கே என்னென்ன தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்பது பற்றி நாளை மாநில அரசு தனியேதான் அறிவிப்பு வெளியிடும்.


இந்திய அளவில் பொது முடக்கத்தை நீட்டித்திருப்பதுடன் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் புதிய தளர்வுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
எனினும், நிலைமையைப் பொருத்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்பதால், தமிழகத்தில் எங்கே பொது முடக்கம் தொடரும், எங்கெங்கே என்னென்ன தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்பது பற்றி ஞாயிற்றுக்கிழமை மாநில அரசு தனியேதான் அறிவிப்பு வெளியிடும்.
ஏற்கெனவே, கரோனா அதிகரித்து வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தளர்வுகள் அறிவிக்கக் கூடாதென மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில், மத்திய அரசு அறிவித்தபடி, தளர்வுகள் நடைமுறைக்கு வருமா, அல்லது தொடருமா என்பது பற்றித் தெரியவில்லை.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்த பட்டியலின்படி , ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றைத் திறக்க இயலுமா என்பதும் உறுதியாகக் கூற முடியாத நிலையில் இருக்கிறது.
ஏற்கெனவே, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பொது முடக்கம் தொடரும் என அறிவித்துவிட்டன.
இதுவரையிலும் மத்திய அரசின் அறிவிப்புகளை அனுசரித்தே தமிழக அரசு முடிவுகளை அறிவித்து வந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடரவுள்ள பொது முடக்கம் எவ்வாறு இருக்கும், மத்திய அரசு அறிவித்தபடி தளர்வுகள் படிப்படியாக நடைமுறைக்கு வருமா என்பது பற்றியெல்லாம் தமிழக அரசின் அறிவிப்பில்தான் தெரிய வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...