நியு யார்க்கில் அஞ்சல்வழி வாக்குகள் எண்ணிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான நியு யார்க் நகர அஞ்சல்வழி வாக்குகளின் எண்ணிக்கை கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நியு யார்க்கில் அஞ்சல்வழி வந்த வாக்குகளை எண்ணும் பணியில் ஊழியர்கள்.
நியு யார்க்கில் அஞ்சல்வழி வந்த வாக்குகளை எண்ணும் பணியில் ஊழியர்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான நியு யார்க் நகர அஞ்சல்வழி வாக்குகளின் எண்ணிக்கை கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் முடிவு அறிவிக்கப்படாத நிலையில் சில இடங்கள் யாருக்கு என்பதில் இந்த வாக்கு எண்ணிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

நியு யார்க் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் 15 லட்சம் அஞ்சல்வழி வாக்குகள்  எண்ணப்பட வேண்டியுள்ளன.

நியு யார்க் மாகாண செனட்டில் ஏற்கெனவே 40-க்கு 23 என்ற அளவில் பெரும்பான்மையாகவுள்ள ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியினர், இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கூடுதலான இடங்களைப் பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன.  

பதிவான அனைத்து அஞ்சல்வழி வாக்குகளும் வந்துசேர வேண்டும் என்பதற்காக வாக்கு எண்ணிக்கையை ஒரு வாரத்துக்கு நியு யார்க் மாகாண நிர்வாகம் தள்ளிவைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com