விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குளிர்காலம்: கேதார்நாத் கோவில் சாத்தப்பட்டது

இமயமலையிலுள்ள கேதார்நாத் கோவில், கடுமையான பனிப் பொழிவுக்கிடையே,  திங்கள்கிழமை சாத்தப்பட்டது.

News image

பனிப் பொழிவில் கேதார்நாத் கோயில்

Updated On :16 நவம்பர் 2020, 9:34 am

கோபேசுவர்: இமயமலையிலுள்ள கேதார்நாத் கோவில், கடுமையான பனிப் பொழிவுக்கிடையே,  திங்கள்கிழமை சாத்தப்பட்டது.

குளிர்காலம் தொடங்குவதையொட்டி, விரிவான பூஜைகளுக்குப் பின், காலை 8.30 மணிக்குக் கோவிலின் கதவுகள் மூடப்பட்டன.

Story image

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்

இவ்விரு முதல்வர்களும் ஞாயிற்றுக்கிழமையே கோவிலுக்கு வந்து, மறு சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டனர்.

கோவிலில் 'சமாதி பூஜை'யையும் பூசகர் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, உற்சவ டோலி எனப்படும் மலர்ப் பல்லக்கில் சிவனுடைய விக்ரகம் வைக்கப்பட்டு, உகி மடத்திலுள்ள ஓம்காரேசுவரர் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, குளிர்கால வழிபாடுகள் நடைபெறும்.

Story image

கரோனா காரணமாகத் தாமதமாகத் தொடங்கி, நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் கேதார்நாத் கோவிலுக்கு வந்து 1.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.