கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய முதியவர், சிறுநீரக, இதய நோய் காரணமாக உயிரிழந்தார்.
மலப்புரத்தைச் சேர்ந்த 85 வயதான இவர், கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஏப். 7, 10, 13 ஆகிய நாள்களில் எடுக்கப்பட்ட சோதனைகளில் தொற்று விலகியதாக உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
நீரழிவு பாதிப்புள்ள இவர், இதய நோய், சிறுநீரகப் பிரச்சினைகளிலும் அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை இறந்தார்.
இவருடைய மரணத்துக்கு கரோனா காரணமல்ல என்று தெரிவித்துள்ள அரசு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கே.வி. நந்தகுமார், இது வழக்கமான மரணம்தான் என்றார்.
மேலும், இவருடைய இறுதிச் சடங்குகள் கரோனா நோயாளிகளுக்குரிய நடைமுறைகளின்படி நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


