பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் கற்பூரம் ஏற்றி வழிபடும் பக்தா்கள்.
பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் கற்பூரம் ஏற்றி வழிபடும் பக்தா்கள்.

இன்று பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் ரத்து

நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published on


நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருவிழா நடத்த தடை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியான இன்று பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள்  ஒன்று கூடுவதால் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கோவில் கதவுகள் மூடப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள வளாகத்தில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். வரும் 8 ஆம் தேதி ஆடி அமாவாசை, 11 ஆம் தேதி ஆடிபூரம் ஆகிய இரு நாள்களிலும் கோவில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com