மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:51 am

DIN

சென்னை: தமிழகத்தில் ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழகத்தில் ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும். 

* காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்.

* 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

* ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* 79,395 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவர் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.

* 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்.

* ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.