தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டி அருகே மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு

உசிலம்பட்டி அருகே பிரவியம்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலையின் போது மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 1:46 pm

DIN


உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பிரவியம்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலையின் போது மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஓடையில் நூறு நாள் வேலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, பிரவியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி, ஓடையில் கம்பியால் மண்ணைத் தோண்டிய போது அங்கு சிலை இருப்பதைக் கண்டார். தொடர்ந்து, அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம்  அவர் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அனைவரும் சேர்ந்து சிலையைத் தோண்டி எடுத்து கொடிக்குளம் கிராம நிர்வாக அதிகாரி ராமசாமியிடம் ஒப்படைத்தனர். அவர் வாலாந்தூர் காவல் நிலையத்தில் சிலையை ஒப்படைத்தார். இதுபற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

கண்டெடுக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை (வெண்கல சிலை)  மார்பளவு அளவு உடைந்த நிலையில், சிலையின் உயரமானது 30 செ.மீ., அகலம் 25.5 செ.மீ., 4.400 கிலோ எனத் தெரிய வந்ததுள்ளது. 

கண்டெடுக்கப்பட் மீனாட்சி அம்மன் சிலை காவல் துறையினர் உதவியுடன் வருவாய் துறை அதிகாரிகள் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.