கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேதா நினைவு இல்லம்: திறந்து வைத்தார் முதல்வர்

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

News image

நினைவில்லத் திறப்பு

Updated On :28 ஜனவரி 2021, 9:50 am

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (ஜன.28) திறந்து வைத்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் வேதா நினைவு இல்லத்தை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 

மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று (ஜன. 27) திறந்து வைத்த நிலையில், இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

வேதா இல்லத்தின் பெயர் பலகையையும், நினைவு இல்ல  கல்வெட்டினையும்  முதல்வர் பழனிசாமி மக்கள் பார்வைக்காக திறந்து வைத்து, ரிப்பன் வெட்டி வேதா நினைவு இல்லத்தினுள் சென்றார்.

ரிப்பன் வெட்டி வேதா இல்லத்தினுள் நுழையும் முதல்வர் உள்ளிட்டோர்..

ரிப்பன் வெட்டி வேதா இல்லத்தினுள் நுழையும் முதல்வர் உள்ளிட்டோர்..

இல்லத்தினுள் சென்ற முதல்வர் பழனிசாமி வரவேற்பரையில் இருந்த குத்து விளக்கை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி நினைவு இல்லத்தை பார்வையிட்டனர்.

வேதா நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.