நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

’எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை கூறினேன்’: சசிகலா பரபரப்பு கருத்து

அதிமுக தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை கூறியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:32 am

DIN

அதிமுக தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை கூறியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தினந்தோறும் அதிமுக பிரமுகர்களுடன் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசிய ஆடியோவை அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். அதில் அவர் எம்ஜிஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருந்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது. கட்சிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பதும், என்னைக் கட்சியை விட்டு நீக்குவதும் சிறுபிள்ளைத்தனமானது. கட்சி தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்ஜிஆர் கேட்பார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி எப்போதும் ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும். பிரிந்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் இந்த கருத்து அதிமுக முக்கியத் தலைவர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளன. 

முன்னதாக சசிகலா அதிமுகவில் இல்லை என்றும். சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.