சங்ககிரியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் சேலம் மேற்கு மாவட்டத்தலைவர் சி. எஸ். ஜெய்க்குமார்.








