47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது திமுக எம்பிக்கள் கூட்டம்

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய திமுக எம்பிக்கள் கூட்டம்
Updated On :16 ஜூலை 2021, 12:22 pm

DIN

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. 

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டம் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஜூலை 16ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.  

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள், மேக்கேதாட்டு அணை விவகாரம், நீட் தேர்வு, முக்கிய விவகாரங்களில் திமுக நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.