கரோனாவால் பெற்றோர்கள் இழந்து அனாதையாகும் குழந்தைகளை அரசு அரவணைக்கும்: சிவ்ராஜ் சிங் சவுகான்

கரோனா நுண்கிருமி தொற்றால் பெற்றோர்களை இழந்து அனாதையாகும் குழந்தைகளையும், இனி மத்திய பிரதேச அரசு அரவணைக்கும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பெற்றோர்கள் இழந்து அனாதையாகும் குழந்தைகளை அரசு அரவணைக்கும்: சிவ்ராஜ் சிங் சவுகான்

போபால்: கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து அனாதையாகும் குழந்தைகளையும், இனி மத்திய பிரதேச அரசே என்று முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிதி உதவி உள்பட பல சலுகைகளைப் பெறுவதற்கான திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில், இனி அனாதையாகும் அனைத்து குழந்தைகளின் கல்வி, உணவு மற்றும் பிற தேவைகள் அரசே ஏற்கும்.

மேலும் பொற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை இனியும் எங்களால் ஒதுக்கி வைக்க இயலாது என்று செளகான் தெரிவித்தார்.

இது குறித்து விபரம் அறிந்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தொற்று நோயால் அனாதையான குழந்தைகளுக்கான திட்டம் மே 21 முதல் நடைமுறைக்கு வந்ததுள்ள நிலையில், மே 1 முதல் ஜூன் வரையிலான காலத்தையும் இது உள்ளடக்கியது என்றார்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com